×

சென்னையில் சாலைகளை தூய்மையாக பராமரிக்க 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள்: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ.  471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்படுகிறது. பேருந்து சாலைகளில் இரவு நேரங்களில் தூய்மைப்பணி நடக்கிறது.  சாலையோரங்கள் மற்றும் மையத் தடுப்பு ஓரங்களில் மெல்லிய மணல் மற்றும் தூசிகள் படிந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், மழைநீர் வடிகால்களில் சென்று அடைப்பையும் ஏற்படுத்துகின்றன.

எனவே, சென்னை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வகையில் இரவு நேரங்களில் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு சாலைகளை சுத்தம் செய்யும் பணி மேற்காள்ளப்பட்டு வருகிறது.
 
15 மண்டலங்களில் மொத்தம் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் பேருந்து சாலைகளில் மட்டும் தூய்மைப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இந்த வாகனங்கள் இரவு நேரங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனங்களின் மூலம் ஒவ்வொரு மண்டலத்திலும் நாளொன்றுக்கு சராசரியாக 25 முதல் 30 கி.மீ அளவிற்கு சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பேருந்து சாலைகளுடன் கூடுதலாக மாநகரின் முக்கியமான உட்புறச் சாலைகளையும் இந்த வாகனங்களை கொண்டு சுத்தம் செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags : Chennai , 78 mechanical sweeper vehicles to keep roads clean in Chennai: Corporation Information
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்